பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு.
78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை மாவட்ட சுதந்திர தின விழா பிரதி அமைச்சர் ரீ , பீ. சரத் தலைமையில் பொலன்னறுவை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திர மாவீரர்கள் நினைவு கூறல், முப்படை , பொலிசார், சிவில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் ஆகியன இடம்பெற்றன.
இந்த நிகழ்வை பொலன்னறுவை மாவட்ட செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது பொலன்னறுவை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ரத்னசிறி, பத்மசிறீ பண்டார பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க , அரச அதிகாரிகள் சமயத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.












(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
