நஜீப் ஹாஜியார் கல்வி நிலையத்தில் சுதந்திர தின நிகழ்வு..!
தர்ஹா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையமும், அமீர் ஹாஜியார் குர்ஆன் மத்ரஸாவும் இணைந்து ஏற்பாடு செய்த 78வது சுதந்திர தின கொண்டாட்டம் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. அதன் இஸ்தாபகர் கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு, நிலையப் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும், குர்ஆன் மத்ரஸா விரிவுரையாளர்களும், மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
(பேருவலை பீ எம் முக்தார்)




