சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் 78ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிப்பு..!
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று (04) புதன்கிழமை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முன்றலில் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா, ஜமாஅத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், பைதுஸ் ஸகாத் நிதியம், வர்த்தக சங்கம் மற்றும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுதந்திர நிகழ்வானது சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், பைதுஸ் ஸகாத் நிதியம் மற்றும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஆகியவற்றின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி.சில்வா உட்பட ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர், பொருளாளர் உட்பட கௌரவ நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், அதன் நிர்வாக உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஏனைய பள்ளிவாசல்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், உலமாக்கள், வர்த்தக சங்க செயலாளர், பொருளாளர் மற்றும் அதன் உறுப்பினர்கள், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா, ஜமாஅத்தினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் பிரதித் தலைவர் ஐ.எல்.எம். ரஃபி (ஹிழ்ரி)யினால் நாட்டின் சுபீட்சத்துக்காக துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)



