Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

எதிர்க் கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி..!

ஒன்றிணைந்து சுதந்திரம் பெற்றது போல் ஒன்றிணைந்து நாட்டையும் கட்டியெழுப்புவோம்.

1948 பெப்ரவரி 4 ஆம் திகதி நாம் பெற்ற சுதந்திரத்திற்கு 78 ஆண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில், அந்த வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதோடு எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது மிக முக்கியமான விடயமாகும். கடந்த 78 ஆண்டுகளில் பக்கச்சார்பின்றி நாட்டைப் பற்றி ஆராய்ந்தால், நாம் பெற்ற பல வெற்றிகளையும் அதே போல் பல பின்னடைவுகளையும் அடையாளம் காண முடியும். அவற்றைப் பற்றி விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிகழ்காலத்தில் செயல்படுவது சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவும் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியமானது.

சனநாயகத்தைப் பாதுகாத்தல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், சுகாதாரம், கல்வி, சமூக நெறிமுறைகள், கலாச்சார பாரம்பரியங்கள் போன்ற துறைகளில் முன்னேற்றத்திற்காக இந்த 78 ஆண்டுகளில் பல பாராட்டத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது இரகசியமல்ல. வடக்கிலும் தெற்கிலும் ஏற்பட்ட இளைஞர் எழுச்சிகளுடன் தொடர்புடைய இரண்டு உள்நாட்டு போர்கள், நாம் பெற்ற சுதந்திரத்தில் நாம் அடைய வேண்டிய வெற்றிகளை ஓரளவு பலவீனப்படுத்தியது என்பது மறைக்க வேண்டிய இரகசியமல். இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மக்களின் வாழ்க்கைத் தரம் சவாலுக்கு உள்ளானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பகுத்தறிவற்ற அரசியல் முடிவுகள், அதிகாரத்திற்காக மட்டுமே செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் பிரபலப்படுத்தி நடத்தப்பட்ட அரசியல் அதிகார மாற்றங்களில், நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட சவாலான நிலைமையை இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஆழமாக ஆராய வேண்டும். தனிநபர் வருமானம், சுகாதாரமான ஆயுள் எதிர்பார்ப்பு, உடல் மற்றும் மன சுகாதார நிலை, சமூக ஒத்துழைப்பு, வாழ்க்கையைப் பற்றி முடிவெடுப்பதற்கான சுதந்திரம், கொடைத்தன்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகியவற்றை தீர்மானமாகக் கருதும் மகிழ்ச்சி குறியீட்டைப் போலவே, உலகின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் அளவிடப்படும் முக்கிய அளவுகோல்களான சுகாதாரமான வாழ்க்கை, சரியான கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம் போன்ற அம்சங்களைப் பற்றி இன்று நாம் காண்பது திருப்திகரமான நிலை அல்ல.

நாம் சுதந்திரம் பெறும்போது எதிர்பார்த்த சுதந்திர சமூகம், சுதந்திர பொருளாதாரம், சுதந்திர வாழ்க்கை மட்டுமல்லாமல், சுதந்திரத்துடன் பெறப்பட்ட ஜனநாயகம், சட்டத்தின் இறையாண்மை போன்ற விடயங்களும் இன்று சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய சவால்களாகவே நம் முன் காணப்படுகின்றன. இவை குறுகிய அரசியலில் கட்டமைக்கப்பட வேண்டியவை அல்லது ஒரு தரப்பினரை மட்டும் பாதிக்கும் விடயங்களாக கருதி புறக்கணிக்கப்பட வேண்டியவை அல்ல. எனவே 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நாம் அறிவுபூர்வமாகவும் விமர்சன ரீதியாகவும் நாட்டின் சவால்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது, பெற்ற சுதந்திரம் நாட்டின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் மக்களின் இறையாண்மையை எதிர்கால சந்ததியினருக்காக வலுப்படுத்தி பேணுவதற்கான பொறுப்பு நமக்கு உள்ளதால் ஆகும். அதற்காக ஜனநாயக போக்கில் உள்ள அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். அதற்காக இந்த சுதந்திர தினத்தில் அனைத்து அரசியல் சிவில் அமைப்புகளும் முழு மக்களும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். நாம் சுதந்திரம் பெற்றதும் இனம், மதம் அல்லது வேறு காரணிகளால் பிரிந்து செல்லாது ஒன்றிணைந்ததன் மூலமாகும். இந்த தருணத்திலும் நாட்டிற்கு தேவையானது அத்தகைய ஒற்றுமையேயாகும்.

சஜித் பிரேமதாச
இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *