உள்நாடு

இனவாதம் பயங்கரவாதத்துக்கு இனி இந் நாட்டில் இடமில்லை..! -தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி திட்டவட்டம்

இலங்கையில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தான் தயாராக இருப்பதாகவும், நாட்டின் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்று யுகம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

133 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியிலிருந்து 1948 இல் சுதந்திரம் பெற்றதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதற்காக இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையைச் சிந்திய எமது முன்னோர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்றார்.

இந்த ஆண்டின் சுதந்திர தினக் கருப்பொருளான “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது எமது இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் பலம் எமது ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, எமது அகராதியிலுள்ள மிகவும் அவலட்சணமான இரண்டு சொற்கள் ‘இனவாதம்’ மற்றும் ‘தீவிரவாதம்’ ஆகும் என்றார். நாம் பிளவுபட்டால் எமது பலம் குன்றிவிடும்.

எமது நாட்டில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது தீவிரவாதத்திற்கோ இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு,” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் அடையாளம், கலாசாரம் உள்ளிட்ட உரிமைகள் ஏற்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாம் தனியாக பயணித்தால் வேகமாக செல்லலாம். ஆனால், குறுகிய தூரமே செல்ல முடியும். ஒன்றாக பயணித்தால் வேகம் குறைவாக இருக்கும். ஆனால் நீண்ட தூரம் செல்லலாம். சட்டவாட்சி, பொருளாதார, கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் இத்தகையதொரு வளர்ச்சியே நாட்டுக்கு அவசியமாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *