உள்நாடு

மாத்தளை டவுன் பள்ளியில் சுதந்திர தின நிகழ்வு..!

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனங்களுக்கு இடையே நல்லுறவை பேணுவோம் எனும் தொனிப் பொருளில் மாத்தளை டவுன் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு நேற்று காலை பள்ளிவாயலில் நடைபெற்றது பள்ளியால் நிர்வாக சபை தலைவர் ஐ.எம்.இஹ்திசாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பகுதி பெளத்த,இந்து, இஸ்லாம், கத்தோலிக்க ஆகிய மதத்தலைவர்கள், மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள், மத்ர்ஸா மாணவர்கள், பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இதில் விசேட சொற்பொழிவையும் நாட்டில் சாந்தி சமாதானம் ஐக்கியத்துக்காக விசேட துஆ பிரார்த்தனை மாத்தளை ஹலீமியா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் மௌலவி அன்வரினால் நடத்தி வைக்கப்பட்டது மற்றும் மதப் பெரியார்கள் பலரும் உரையாற்றினர்

(மாத்தளை எம்.சதூர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *