Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

பேருவளை சீனன் கோட்டையில் விமர்சையாக நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டம்..!

78 வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீட வளவில் அதிபர் மௌலவி எம் ஏ எம் அஸ்மிகான் (முஅய்யிதி) தலைமையில் நடைபெற்றது.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் மாணவர்களால் இசைக்கப்பட்டது. சீனங்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும், ஜாமிஅதுல் பாஸிய்யா நிர்வாக உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் இஹ்ஸான் அபுல் ஹஸன் (நளீமி) சிறப்புரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது :
எமது நாட்டுக்கு சுதந்திரத்தை பெறுவதற்காக சிங்கள, தமிழ் தலைவர்களோடு முஸ்லீம்களும் மிகுந்த பங்களிப்பு செய்தனர். அந்த சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் அனைவரும் இன,மத பேதமின்றி செயலாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

நாட்டில் சாந்தி சமாதானம் ஐக்கியத்திற்காக பிரார்த்தனையை அதிபர் மௌலவி எம் ஏ எம் அஸ்மிகான் (முஅய்யிதி) மேற்கொண்டார்.

அத்தோடு மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றதோடு, ஹிப்ழ் மத்ரஸா பொறுப்பாளர் மெளலவி நுஸ்கி (இல்மி), கலாபீட உஸ்தாத்மார்களான மெளலவி நப்லுல்லாஹ் (அஜ்வாதி), மெளலவி அஸ்ஜத் (நஜாஹி), அல்ஹாபில் இல்ஹாம் , கலாபீட நிர்வாக சபை இணைச் செயலாளர்களான அல்ஹாஜ் முஸ்னி உவைஸ், ஜனாப் ரியாஸ் பாஸி உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், முழு நேர, மற்றும் பகுதி நேர மாணவர்கள், ஊர் ஜமாத்தார்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(பேருவளை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *