Monday, March 23, 2026
Latest:
உள்நாடு

கிவுலேகட அஹ்ஸனுல் உலூமில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு..!

இலங்கையின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அநுராதபுர மாவட்டத்தில் உள்ள ஹொரவ்பொதானை பிரதேசத்தில் அமைந்துள்ள கிவுலேகடை கிராமத்தில் அமைந்துள்ள அஹ்ஸனுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டிலான சுதந்திர தின நிகழ்வு கல்லூரி வளாகத்தில் மௌலவி எஸ் எச் அப்துல் ஹலீம் ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது.

கல்லூரியின் நிர்வாக சபை தலைவர் அல் ஹாஜ் ஆர் மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு அடுத்து மாணவர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அதைத்தொடர்ந்து விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னனிகள் சம்மேளன பொருளாளர் அல்-ஹாஜ் அர்சத் ஸவாஹிர் இன்னும் களுத்துறை மாவட்ட முஸ்லீம் லீக் வாலிப முன்னனிகள் சம்மேளன ஊடக பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்-ஹாஜ் பீ.எம்.முக்தார் இன்னும் சீனன்கோட்டை பெருதமலை நலன்புரிச்சங்க உறுப்பினர்களான எம்.ஸுப்யான் மற்றும் இபாம் கலீல் ஆகியோரும் மேலும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(பேருவளை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *