உள்நாடு

ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வு..!

ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை அதன் உப குழுக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வு ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சிரேஷ்ட பொறியாளர் A.M. றாபி தலைமையில் பள்ளிவாசல் வளாகத்தில் 2026.02.04 ம் திகதி காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.
இதில் அதிதிகளாக கெப்டன் ஈ.எம்.ஏ.எஸ் ஏக்க நாயக்க ஒலுவில் பொலிஸ் போஸ்ட் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.தௌபீக் மற்றும் ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பைத்துல் மால்- உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது சுதந்திர தின உரை பள்ளிவாசல் பொருளாளர் இஸட்.ஏ.றகுமானினால் நிகழ்த்தப்பட்டது.
தாறுத் தலபா மனன கற்கை நிலைய மாணவர்கள்,ஒலுவில் அன் நஹ்ழா பாலர் பாடசாலை மாணவர்களும் இன் நிகழ்வில் கலந்து கொண்டமை விசேடமானதாகும். இதற்கான ஊடாக அனுசரணை ஒலுவில் மீடியாவினால் வழங்கப்பட்டது.

(இஸட்.ஏ.றஹ்மான்-ஒலுவில் விசேட செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *