உள்நாடு

ஷிராந்தி நாமலுக்கு இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை இன்று (03) விசாரணை அதிகாரிக முன் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 27ஆம் திகதி ஷிராந்தி ராஜபக்ஷவை வாக்குமூலம் அளிப்பதற்காக  அழைத்திருந்த போதிலும், அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது எனவும், அதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் தனது சட்டத்தரணி ஊடாக  கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், மீண்டும் இன்றைய தினம் அவரை முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவை இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போது, அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் வேறொரு தினத்தை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய, இன்று அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *