உள்நாடு

நமடகஹவத்த அல் புர்கானில் இரு மாடிக் கட்டிட திறப்பு விழா..!

மாத்தளை மாவட்டம் கலேவல கல்வி வலத்துக்குட்பட்ட கலேவல நமடகஹவத்த அல்புர்கான் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிட திறப்பு விழா அண்மையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது பாடசாலை அதிபர் w.m சமீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழில் அதிபரும் கொடை வள்ளலுமான ஏ எஸ் கலீல் ரஹ்மத்துல்லாஹ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கட்டிடத்தை வைப்பவ ரீதியாக திறந்து வைத்தார். மற்றும் கலேவல கல்வி வலய பணிப்பாளர் ரஞ்சித் சிரிவர்த்தன உட்பட பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கல்விமான்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இக்கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகளுக்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உட்பட பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பலரும் இதற்கு பாரிய பங்களிப்பை வழங்கினர்

கலேவல நமடகஹவத்தயை சேர்ந்த தொழில் அதிபரும் கொடை வள்ளலுமான எஸ் எம் கலீல் ரஹ்மத்துல்லாஹ் தமது பெற்றோர் நினைவாக சமூன் என்ட் சப்ரியத் நினைவு மண்டமும் என்ற பெயரில் கேட்போர் கூடத்துடன் கூடிய இரண்டு மாடி கட்டிடத்தினை தனது சொந்த நிதியில் நிர்மாணித்து அல்புர்கான் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

(மாத்தளை எம்.சதூர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *