உள்நாடு

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் (OLESB) அமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான “அழுத்தத்தை ஆற்றலாக்கும் கலை (O/L) வெற்றிக்கான மனப்பான்மை” எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டல் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் 02.02.2026ஆம் திகதி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் அமைப்பின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம வழவாளராக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்தியட்சகர் வைத்தியர் சனூஸ் காரியப்பர் கலந்து கொண்டார். இவ் கருத்தரங்கிற்கு அட்டாளைச்சேனை பிரதேசத்திள் உள்ள தேசிய பாடசாலை, அல்-அர்ஹம்,ஸஹ்ரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் கலந்து கொண்டன
அத்துடன் இவ் அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(கே. எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *