49 கைதிகளுக்கு நாளை பொது மன்னிப்பு
78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 49 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளை (04.02.2026) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், இந்த சிறப்பு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், கைதிகள் அனுபவிக்கும் ஒவ்வொரு ஆண்டு சிறைத்தண்டனைக்கும் ஒரு வார மன்னிப்பு வழங்கப்படுவதுடன், ரூ. 75,000 க்கும் குறைவான அபராதம் செலுத்தாததன் காரணமாக சிறையில் உள்ள கைதிகளின் மீதமுள்ள தண்டனை காலம் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
