கிவுலேகட அஹ்ஸனுல் உலூமில் சுதந்திர தின நிகழ்வு..!
இலங்கையின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அநுராதபுர மாவட்டத்தில் உள்ள ஹொரவ்பொதானை பிரதேசத்தில் அமைந்துள்ள கிவுலேகட கிறாமத்தில் அமைந்துள்ள அஹ்ஸனுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டிலான சுதந்திர தின நிகழ்வு கல்லூரி வளாகத்தில் காலை 08 00 மணிக்கு அதிபர் மௌலவி எஸ் எச் அப்துல் ஹலீம் ரஹ்மானி தலைமையில் நடைபெறும்.
கல்லூரியின் நிர்வாக சபை தலைவர் அல் ஹாஜ் ஆர் மன்சூர் அவர்களின் வழி காட்டின் கீழ் நடைபெறும் நிகழ்வில் தேசிய கொடி ஏற்றி வைக்கப் படுவதை அடுத்து மாணவர்களினால் தேசிய கீதம் இசைக்கப்படும் அதைத் தொடர்ந்து விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம் பெறும்,
நிகழ்வில் கலாபீட உப அதிபர் ஏ. ம் அஸீம் தாபிதி மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கலந்து கொள்வார்கள்.
(பேருவளை பீ எம் முக்தார்)
