உள்நாடு

அநுராதபுர மாவட்டத்தில், இரண்டாவது முறையாகவும் ஆர். ஜே மீடியாவின் இலவச செயலமர்வு

ஆர். ஜே மீடியா ஊடக வலையமைப்பானது தனது ஆறு வருடப் பூர்த்தியை முன்னிட்டு, இலங்கையின் 25 மாவட்டங்களையும் மையமாகக் கொண்டு, பெண்களின் சுயதொழிலை ஊக்கப்படுத்தும் முகமாக ஊடகம், தலைமைத்துவம், மருதாணிக் கலை, மணப்பெண் அலங்காரம் மற்றும் கேக் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலவச செயலமர்வுகளை நாடளாவிய ரீதியில் நடத்தி வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக, அநுராதபுர மாவட்டத்தை மையமாகக் கொண்டு, இரண்டாவது முறையாகவும் ஒருநாள் இலவச செயலமர்வானது, அண்மையில் அநுராதபுர ஸிடிஸி வரவேற்பு மண்டபத்தில், ஆர். ஜே மீடியா வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.இன்ஷாப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக, மாணவர்களுக்கான மருதாணிப் பயிற்சியினை, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவியும், மருதாணிப் பயிற்றுவிப்பாளருமான ஹஷ்மா ஷபீன், மணப்பெண் அலங்காரம் தொடர்பான விரிவுரையை, தகவல் தொழில்நுட்பக் கற்கையில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவரும், அழகுக் கலை நிபுணருமான என்.எப். அப்ரா, கேக் தயாரிப்பு பற்றிய விரிவுரையை, எஸ்.ஆர். பேக்கரி உரிமையாளரும், கேக் கலை பயிற்றுவிப்பாளருமான ஷிப்னா ரிஸ்லான் ஆகியோர் வழங்கி வைத்ததுடன், தலைமைத்துவம் மற்றும் ஊடக செயலமர்வை, ஆர். ஜே மீடியா பணிப்பாளரும், ஊடகப் பயிற்சிவிப்பாளருமான ஏ.எம். இன்சாப் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, அநுராதபுர நியூ ஒரியண்ட் ஜூவல்லர்ஸ் பணிப்பாளர் ஏ.என்.ஏ.நாஸிர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எம்.எஸ்.எம். அல் பாரிஸ்,
சிறப்பு அதிதிகளாக, விமென் ஒவ்ன்ட் அகடமி பணிப்பாளர் பாத்திமா ருஷ்தா, ஐ.ஆர் அகடமி பணிப்பாளர் எம்.ஐ. பாத்திமா ஷம்லா, ஸெய்ன் தயாரிப்பு மற்றும் ஸீ அகடமி உரிமையாளர் ஜே.டி. ஜம்ல்துல் நளீரா ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், அநுராதபுர மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு, கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *