கோல்டன் கால்பந்தாட்ட பயிற்சியகம் இன்று மக்கொனையில் ஆரம்பம்
மக்கொனை, இந்திரக்கரையில் சமூக விளையாட்டு வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாக, கோல்டன் கால்பந்தாட்ட பயிற்சியகம் (GOLDEN FOOTBALL ACADEMY) எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதியன்று மக்கொனை அல்ஹஸனியா மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இளைஞர்களையும், வளரும் சிறார்களையும், விளையாட்டில் ஈடுபடுத்தி விளையாட்டின் மூலமாக சிறப்பான அடைவுகளை எட்டச் செய்யும் நோக்குடனும், ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் நேர்மையான பண்புகளை இளைஞர்களிடையே வளர்ப்பதை இலக்காகக் கொண்டும் இந்த கோல்டன் கால்பந்தாட்ட பயிற்சியகம் உருவாக்கப்படவுள்ளது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஷேட அதிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் இதன் தொடக்க விழா நடைபெறவுள்ளது.
இந் நிகழ்ச்சிக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இந் நிகழ்வின் ஒரு பகுதியாக அல்ஹஸனியா மகா வித்தியாலய 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட கால்பந்து அணிகளுக்கு ஜேர்ஸி (Jersey) வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இளம் வீரர்களின் சினேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன. மேலும், மூத்த உதைபந்தாட்ட வீரர்களுக்கான இரவு நேர கால்பந்தாட்ட போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(பேருவலை பீ.எம். முக்தார்)
