உள்நாடு

எரிபொருள் விலையில் திருத்தம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு 2 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளன. 

திருத்தப்பட்ட புதிய வில விபரங்கள் பின்வருமாறு: 

லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன்: 

தற்போதைய விலை: ரூ. 294.00 

குறைக்கப்பட்ட தொகை: ரூ. 2.00 

புதிய விலை: ரூ. 292.00 

லங்கா ஓட்டோ டீசல்: 

தற்போதைய விலை: ரூ. 279.00 

குறைக்கப்பட்ட தொகை: ரூ. 2.00 

புதிய விலை: ரூ. 277.00 

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அவை பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

மாற்றமின்றித் தொடரும் விலைகள் வருமாறு: 

லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் யூரோ 4: ரூ. 340.00 

லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4: ரூ. 323.00 

லங்கா மண்ணெண்ணெய்: ரூ. 182.00 

இந்த விலைத்திருத்தம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *