விளையாட்டு

“FIFA அரீனா” மினி கால்பந்து மைதானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கை கால்பந்து சம்மேளத்தின் ஏற்பாட்டில் (FFSL) சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) அனுசரணையுடன் நேற்று (31) சனிக்கிழமை நீர்கொழும்பில் “FIFA அரினா” மினி கால்பந்தாட மைதானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வு இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டும் நிகழ்வாகவும் நோக்கப்படுகின்றது.

புதிய “FIFA அரீனா” மினி கால்பந்து மைதானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் கால்பந்தின் சர்வதேச நிர்வாக அமைப்பான FIFA முன்னெடுத்து வரும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.

அனைவரையும் உள்ளடக்கிய வகையில் கால்பந்துக்கு அணுகலை அதிகரிக்கும் நோக்கில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட மினி மைதானங்களை அமைப்பதே இதன் இலக்காகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சுகத் திலகரட்ன மற்றும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜெஸ்வர் உமர் மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *