உள்நாடு

கடற்படையின் 1148 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொலன்னறுவையில் மக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அரலகங்வில கிராமத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் வியாழக்கிழமை ( 29) பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.​

கடற்படையின் தொழில்நுட்ப ஆதரவுடன், சுகாதார அமைச்சின் தலைமையுடன், ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், கடற்படை இதுவரை 1148 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கியுள்ளது.

இவ்வாறு இயக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம், திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவின் அரலகங்வில பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *