சமுர்த்தி பயனாளிகளுக்கான வலுவூட்டல் வேலைத்திட்டம்
சமுர்த்தி திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் நேற்று முன்தினம் (29) வியாழக்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தவிசாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
