திருமதி உலக அழகி போட்டி; சபீனா யூசுபிற்கு மூன்றாவது இடம்
அமெரிக்காவில் நடைபெற்ற 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த போட்டியாளர் முடிசூட்டப்பட்டார்.
உள்ளூர் நேரப்படி இன்று காலை (30) போட்டி நிறைவடைந்துள்ளது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப், மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
போட்டியை நடத்திய அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
உலகம் முழுவதிலுமிருந்து 60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
