சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா..!
சாய்ந்தமருது கமு/கமு/அல்-கமறூன் வித்தியாலயத்தில் தரம் 1இற்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (29) வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவர்கள் தரம் ஒன்றுக்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களை கிரீடம் மற்றும் மாலை அணிவித்து இனிப்புக்களும் வழங்கி வரவேற்றனர்.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.நுஸ்ரத் பேகத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரியுமான ஏ. அஸ்மா மலீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் யூ.எல்.நஸார் அவர்களும் சிறப்பு அதிதியாக பாடசாலையின் EPSI இணைப்பாளரும் விசேட கல்விக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் எம்.எம். சியாம் மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம். அன்சார் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாடசாலையின்
ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பயிற்சி ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், தேசிய கீதம், பாடசாலை கீதம்,வலயக்
கீதம் இடம்பெற்றதுடன் அதிபர் உரை, மாணவர்கள் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் அதிதிகளால் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு அறிவுரைகளும் சொல்லப்பட்டன.
தரம் ஒன்று மாணவர்களுக்கு அதிதிகளால் ஏடு தொடங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு நன்றி செலுத்தப்பட்டதுடன் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் அதிபர் எம்.எச்.நுஸ்ரத் பேகத்திற்கு நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)






