கற்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கால் கோள் விழா
புதிய பாடத்திட்டத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் கால் கோள் விழா நிகழ்வு கற்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலையில் அதிபர் எம் எம் எம் நௌப் தலைமையில் வியாழக்கிழமை (29) சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ எம் ஜவாத் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக வேல்ட் விஷன் நிறுவனத்தின் கற்பிட்டி இணைப்பாளர் கலந்து கொண்டார். அத்தோடு பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ள நிலையில் வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
