புதிய பாடத்திட்டத்துடன் முதலாம் தரத்துக்கு மாணவர் சேர்ப்பு நிகழ்வு இன்று
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய விழா, அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று காலை கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய கூறுகிறார்.
