அட்டாளைச்சேனை சம்புநகர் அக்/அல்-மினா வித்தியாலயத்தில் வித்தியாரம்பம் நிகழ்வு
அட்டாளைச்சேனை சம்புநகர் அக்/அல்-மினா வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களின் “ஆரம்ப கல்விக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம் செய்யும் வித்தியாரம்ப விழா இன்று (29.01.2025)
காலை வெகு விமர்சையாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பப் பிரிவு வலயத் தலைவர் M.S.M. நஸீர் நெறிப்படுத்தலில் பாடசாலையின்
அதிபர் M.I.M. றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்கான குவாசி நீதிபதி ஓய்வு நிலை அதிபர் ஏ.சீ.சைபுத்தீன்(SLEAS) பிரதம அதிதியாகவும்,
அட்டாளைச்சேனை ஜம்மியத்துல் உலாமாவின் செயலாளர் பாடசாலை யின் மௌலவி N.T. நசீர் கௌரவ அதிதியாகவும், பமில் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துப் பணிப்பாளர் இளம் சமூக சேவகர் A.M.M. பமில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் 5ம் பிரிவிற்கான
சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
S.H.M. சம்றூஸ், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் A.L.M. அக்ரம்(அர்சாத்) ஆகியோர் விசேட அதிதிகளாகவும், பாடசாலையின் உதவி அதிபர் எம்.ஐ. ஹாசீம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்களான M.A.M. அசாட் அபூபக்கர், A.H. நியாஸ், திருமதி M.F. றிஸ்வின் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு தரம் 1 மாணவர்களுக்கு உத்தியோகபூர்வ மாக வித்தியாரம்பம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
2026ஆம் ஆண்டு வித்தியாரம்ப விழாவி ற்கு விசேடமாக தயார் செய்யப்பட்ட கேகினை பிரதம மற்றும் கௌரவ அதிதிகளால் வெட்டப்பட்டு மாணவர்களு க்கு இதன் போது வழங்கி வைக்கப்பட்ட ன.
இதன் போது தரம் – 2 மாணவர்களால் இவ்வாண்டு தரம் – 1 இற்கு இணைக்கப் பட்ட மாணவர்களை மாலை அணிவித் தும் இணைப்புப் பண்டங்கள் வழங்கியும்
வரவேற்றனர்.
இந்நிகழ்வில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் வாழ்த்துச் செய்தியினை ஆரம்பப் பிரிவு வலயத் தலைவர் M.S.M. நஸீர் ஆசிரியரினால் எடுத்துரைக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் சங்க செயலாளர் பெற்றோர்கள் சமூகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






(கே. எ. ஹமீட்)
