உள்நாடு

பொலன்னறுவை அஜ்வாத் வைத்தியசாலை சபாநாயகரிடம் நாட்டை கட்டி எழுப்பும் திட்டத்திற்காக நிதியுதவி வழங்கியது

“கொண்டாட்டங்களை விடவும் அன்பையும் இரக்கத்தையும் தேர்ந்தெடுப்பதே மேல்” பொலன்னறுவையில் இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக இயங்கி வரும் வீனஸ் லங்கா (அஜ்வாத் ) தனியார் வைத்தியசாலை அவர்களது வருடாந்த விருந்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியுடன் மேலதிக நிதிப்பங்களிப்பையும் சேர்த்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக “மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்” (Rebuit Sri Lanka) ஸ்ரீலங்கா அறக்கட்டளைக்கு நன்கொடையாக ஒரு தொகைப்பணத்தினை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்தினவிடம் கையளித்துள்ளனர்.

வைத்தியசாலையின் இஸ்தாபகத்தலைவர் Dr எம்.பி.எம்.அஜ்வாத் தலைமையில் இடம்பெற்ற குறிtத நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற சபாநாயகருமான ஜகத் விக்ரமரத்ன பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு “ரீபில்ட் சிறீலங்கா” நிதிக்காக வழங்கப்பட்ட நன்கொடைத்தொகையினை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் வைத்தியர் அஜ்வாத்தின் மனைவி ஆர்.எம்.கே.பமுனுவ, மகளும் வைத்தியருமான எம்.ஏ.காலிதா, ஏ.ஏ.எம்.மபாஸ் மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(அஹமட் இர்ஷாட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *