அட்டாளைச்சேனை நிலாமியா ஜுனியர் பாடசாலையின் வித்தியாரம்பம் விழா
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை நிலாமியா ஜுனியர் பாடசாலையின் வித்தியாரம்பம் விழா இன்று (29) பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எப்.எம். நழிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓய்வு நிலைலுள்ள பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ். அஹமட் கியாஸ், உதவிக் கல்விப்பணிப்பாளர் யூ.எம். வாஹீட், ஆசிரிய ஆலோசகர் என். சம்சுடீன், அதிபர் ஜப்பார், உட்பட வலய இணைப்பாளர் எம்.ஐ. ஜாபீர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அபிவிருத்திக் குழு மற்றும் பெற்றோர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்வித்தியாரம்ப விழாவில் சிரேஷ்ட மாணவர்களினால் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.






(றிபாஸ்)
