மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் விமான விபத்தில் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் இன்று புதன்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் பவார் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், விமானத்தின் இடிபாடுகள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடப்பதையும், தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகை கிளம்புவதையும் காட்டியது.
அஜித் பவார், தனியார் மூலம் இயக்கப்படும் ஒரு தனி விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார், அதில் மேலும் மூன்று பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
அவசரகால மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, மேலும் பயணிகளின் நிலை மற்றும் சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணம் மற்றும் அஜித் பவார் நிலை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
நேற்று செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பவார் கலந்து கொண்டார்.
இந்நிலையில், புனேவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான தொடர் கூட்டங்களுக்காக பாராமதிக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
