பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மர்ஹபா ரமழான் விற்பனை கண்காட்சி
பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த மர்ஹாபா எனும் ரமலான் முன் கூட்டிய விற்பனை கொழும்பு கண்காட்சி விற்பனை மண்டபத்தில் கல்லுாாி அதிபர் நஸ்ரியா முனாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பழைய மாணவிகள் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட உள்ள அதிநவீன தொடர்மடி வகுப்பறை மற்றும் டிஜிட்டல் நிலையத்திற்காக நிதி சேகரிக்கும் முகமாக கடந்த 4 தடவையாக இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இக் கட்டிடத்தின் நிர்மாணிக்க 1000 மில்லியன் ரூபாவை சேகரிக்க வேண்டியுள்ளது. அதற்காக பழைய மாணவிகள் அதிபர். பெற்றோர்கள் நலன் விரும்பிகள் முயற்சியின் பயனாக 100 மில்லியன் ரூபாய் நிதியை சேகரித்துள்ளனர்.
இந் நிகழ்விலும் பழைய மாணவி ஒருவர் ஒர் மில்லியன் ரூபாவை நன்கொடையாக கட்டிட நிதிக்கு கல்லூரியின் பழைய மாணவி யின் உப தலைவி பெரோஸா முஸம்மில் இடம் வழங்கி வைத்தார்.
கல்லூரி அதிபர் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் புகழ் பெற்று விளங்கும் இப்பாடசாலை கடந்த 80 ஆண்டுகளை கொண்டுள்ளது.
ணஇக்கட்டிடங்கள் காலம் சென்ற சேர் ராசிக் பரீட் அவர்களின் அன்பளிப்பு செய்பவையாகும் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகளையும் மும்மொழிகளும் கற்பிக்கும் அரசு தேசிய பாடசாலையின் எதிர்கால சமுதாயத்திற்கு மேலும் நிர்மாணிக்க வேண்டியுள்ளது.
வகுப்பறைகள், கூட்ட மண்டபம், மற்றும் ஆய்வு கூடங்கள், விளையாட்டு, கணினி வகுப்புகள் இட நெருக்கடி களாலும் கட்டிடங்கள் பழுதடைந்த நாளும் இப்பாரிய புதிய 5 மாடிக்கும் மேலான ஓர் தொடர் மாடியை கொண்டு இதனை நிரப்புவதற்கு இக் கல்லூரி வாழ் சமூகம் பாடுபட்டு வருகிறது ஆகவே பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் அவர்களது குடும்பங்கள் கல்விக்காக உதவும் படியும் கல்லூரி அதிபர் நஸ்ரியா முனாஸ் வேண்டிக் கொண்டார்.


(அஷ்ரப் ஏ சமத்)
