உள்நாடு

நீதிமன்றில் ஆஜரானார் ரணில் விக்கிரமசிங்க

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், தனது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இதற்கமைய, வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி, அங்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

முன்னாள் ஜனாதிபதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *