முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள் நூல் வெளியீடு
கலாபூஷணம் பரீட் இக்பால் எழுதிய முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள் நூல் வெளியீடு 18.01.2026 திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு தமிழ்ச் சங்கம் மண்டபத்தில் ஓய்வுபெற்ற பிரதி கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் M.S.A.M. முஹுதார் அவர்களின் தலைமையிலும் Muzan International Chairman முஸ்லிம் ஸலாஹுத்தீன் அவர்களின் முன்னிலையிலும்
President-Muslim Council of Sri Lanka, Chief Editor of Uthayam அல்ஹாஜ் N.M. அமீன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அலி அஸீஸ், SLBC முஸ்லிம் சேவை பிரதானி பாத்திமா றினூஸியா ஜஹ்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Dr. A.R.A.ஹாபீஸ், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜன், இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் தலைவர் இம்ரான் நெய்னார், M.A.C. Global Holdings (Pvt) Ltd தலைவர் M.A.C. மஹ்ஸூம், SLBC முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் கலாபூஷணம் அல்ஹாஜ் M.Z. அஹ்மத் முனவ்வர், மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் நற்பணி மன்றம் தலைவர், ஒலிபரப்பாளர் இர்ஷாத் ஏ. காதர், அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் M.S. றஹீம், ஓய்வு பெற்ற ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான A.C. நஜுமுத்தீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட யாழ் முஸ்லிம்கள் அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
















