சிறப்பாக நடந்த ஜே.எம்.ஜே மீடியா இன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
ஜே.எம்.ஜே மீடியா (pvt)Ltd மற்றும் Global Inside24 News media வினால் பொதுமக்களுக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூகத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இலகுவாக புரிந்து கொள்ளும் விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த கட்டுரைகள்,பேச்சு க்கள்,ஓவியங்கள்,போஸ்டர் பிரச்சாரங்கள்,விழிப்புணர்வு உரைகள் போன்ற நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
இந் நிகழ்வில் சிறுவர், சிறுமிகளின் அடிப்படை உரிமைகளை வழங்காது சுயலாபம் கருதியும் வாழ்வாதார தேவைகளுக்காகவும் பணிகளில் அமர்த்தப்படுதல், சிறுவர் மீதான வன்முறைகளில் முக்கியமான ஒன்று அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும், நாளைய தலைவர்களான குழந்தைகளை கல்வி கற்பதற்கு அனுப்பி அவர்களை சிறந்த தலைவர்களாக்குவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
ஒரு குழந்தை வளர்ந்து சமூகத்தில் ஒரு நபராக இணையும் போது அவன் அல்லது அவள் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் ஒரு முக்கிய காரணியாகின்றனர். அத்துடன் அவர்கள் சமூகத்தை மாற்றியமைக்கும் ஆயுதாமாக உருவெடுக்கலாம். எனவே ஒவ்வொரு குழந்தையும் தமது குழந்தை பருவத்தில் சரியான கல்வியையும் ஏனைய வளங்களையும் அனுபவிக்க உரிமைபெற்றவர்கள் இவர்களின் உரிமைகளை சுற்றி உள்ளோர் நல்லமுறையில் கொடுக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஜே.எம்.ஜே மீடியாவின் பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் தலைமையின் கீழ் இம் மீடியாவின் சர்வதேய ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள்,இளைஞர்கள்,பெண்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெருமளவில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் முழு நோக்கமும் உலகளவில் பரவி இருக்கும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கும் இந்த செயலை ஒழித்து குழந்தைகளின் உரிமையை கொடுப்பதாகும். அதனை சரியாக புரிந்து கொண்டு
குழந்தைகளை தொழிலுக்கு அனுப்பாது அவர்களுக்கான உரிமைகளை சரியாகக் கொடுத்து நல்ல தலைவர்களாக்குவோம் என்று அனைத்து பெரியவர்களும் உறிதிமொழியை எடுத்ததே இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.



(ஜஸூரா ஜலீல்)
