வெகு விமரிசையாக நடைபெற்ற மருதானை பிரீமியர் லீக் ஆரம்ப நிகழ்வும், சாதனையாளர் கெளரவிப்பும்
பேருவளை மருதானை பிரிமியர் லீக் – 2026 கிரிக்கட் வெற்றிக் கிண்ணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வும், மருதானைப் பகுதியைச் சேர்ந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள் , சட்டத்தரணிகள், கல்விமான்கள், சாதனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் பேருவளை காலி வீதியிலுள்ள “ஸிமிச்” வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் கலாநிதி (பீ. எச்டி) பட்டம் பெற்ற பேருவளை அப்ரார் கல்வி நிலைய தலைவர் கலாநிதி அல்ஹாஜ் அஸ்வர் அஸாஹிம் (அஷ்ரபி – அல்அஸ்ஹரி), 30 வருடங்களுக்கி மேலாக வைத்திய சேவை பணியிலும் மற்றும் அப்ரார் ஸகாத் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து பணியாற்றும் வைத்திய சிரோமணி, வைத்தியஜோதி மற்றும் தேசியபிமாணி அல்ஹாஜ் பஸீஹூல் லிஸான், வைத்திய சேவையில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக பணிசெய்யும் மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் டாக்டர் மர்ஜான் ஹூஸைன் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
களுத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்துகமை மற்றும் தொடங்கொடை பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஆர்.ஏ. சன்ஜீவ ரணசிங்க விடமிருந்து விருதுகளைப் பெற்றுக் கொள்வதை கீழுள்ள படங்களில் காணலாம்.



(பேருவளை பீ.எம். முக்தார்)
