சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் புதுமுக மாணவர்களுக்கு வரவேற்பு..!
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில், 2026இல் தரம் 6க்கு அனுமதிக்கப்படும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (26) பாடசாலை முன்றலில் விமர்சையாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் அவர்களின் வழிகாட்டலில், உதவி அதிபர் எம்.எச்.லாபிர் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இப்பாடசாலையின் பழைய மாணவரும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு அதிகாரியுமான எம்.எம். அஹமட் சனூன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு உரையாற்றினார்.
இதன்போது, மாணவர்கள் ஆசிரியர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், பரிசு வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.
அத்துடன் இதனை சிறப்பாக வடிமைத்து செயற்படுத்த உதவிய தரம் 6 ஏ பிள்ளைகளான அஸாரிப், திஹ்யா, அப்துல்லாஹ் அதீக், அத்னான் ஆகியோரின் பெற்றோர்களுக்கும்
வகுப்பறை திருத்த பணிகளுக்கு உதவிய பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு செயலாளர் பொறியியலாளர் எம்.சி.கமால் நிஷாத் மற்றும் அலங்கார வேலைகளில் பங்கெடுத்த தரம்-6 பகுதித் தலைவர் எம்.ஐ.எம். நௌஸாத், ஒழுக்காற்று சபை பொறுப்பு ஆசிரியர் எம்.எஸ்.எஸ்.ஷிப்லி, ஆசிரியர்களான ஏ.ஜீ.அஷ்ஹர், ஏ.எல்.எம். இர்ஷாத் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம் நுஸ்கி ஆகியோருக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)







