ஐ.பி. எச். எஸ் கெம்பஸ் மற்றும் என். ஐ. எஸ். ரி கல்வி நிறுவனங்களின் வருடாந்த பட்டமளிப்பு விழா
அக்கரைப்பற்றில் அமைந்துள்ள ஐ.பி. எச். எஸ் கெம்பஸ் மற்றும் என். ஐ. எஸ். ரி கல்வி நிறுவனங்களின் வருடாந்த பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
கெம்பஸின் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் என்.ரி ஹமீட் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் துறையின் ஓய்வுநிலைப் பேராசிரியர் எம். அப்துல் கரீம் பிரதம அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி உமர்லெப்பை ஜெய்னுதீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மேலும், கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த கல்வியாளர்கள், விரிவுரையாளர்கள், நிருவாக அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கிலங்கையின் கட்டட நிர்மாணத் துறையின் முன்னணி கல்வி நிறுவனங்களாக தொழிற்படும் ஐ.பி.எச்.எஸ் மற்றும் என்.ஐ.எஸ்.ரி கல்லூரிகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







(றிபாஸ்)
