ஐ.தே.க,ஐ.ம.சக்தி இணைவு.பேச்சு வெற்றி குறித்து சஜித் நம்பிக்கை.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்கு இடையே இன்று இடம்பெற்ற மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு வெற்றிகரமான முடிவை எட்டும் என தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற இந்த முக்கிய கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ருவன் விஜயவர்தன, தலதா அதுகோரல,நவீன் திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் கூட்டணிகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான இந்த இணக்கப்பாட்டு முயற்சிகள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
