பேருவளை சந்திகளில் சீ.சீ.ரீ.வி.கமெராக்களை பொருத்தும் திட்டம்..!
பேருவளை சீனங்கோட்டை முத்துக்கள் வட்ஸ் அப் குழுமம் ஆரம்பிக்கபட்டதில் இருந்து இன்று வரை சுமார் மூன்று வருடங்களாக சீனன் கோட்டைப் பகுதியில் பாரிய சமூகப் பனிகளை செய்து வருகிறது.
இந்த வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக சீனன் கோட்டை பகுதியை உள்ளடக்கிய முக்கிய சந்திகளில் சீ.சீ.டீ.வீ கமராக்களை பொருத்துவதற்கு முன்வந்துள்ளது.
பேருவளை பொலிஸாரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்திற்கு பிரதேச பரோபகாரிகள், மேற்படி வட்ஸ்அப் குழும அங்கத்தவர்கள், சீனன்கோட்டை பகுதி நலன் விரும்பிகள் சீ.சீ.டீ.வீ கமராக்களை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளனர்.
முக்கிய சந்திகள், சீனன்கோட்டை பத்தை சர்வதேச இரத்தினக் கல் வர்த்தக சந்தை, பாடசாலைகள், பள்ளி வாசல்கள், விளையாட்டரங்குகள், உள்ள பகுதிகள் இந்த சீ.சீ.டீ.வீ கமராக்கள் பொறுத்தப்படவுள்ளதாக சீனங்கோட்டை முத்துக்கள் வட்ஸ் அப் குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாஸிம் தெரிவித்தார்.
இதன் ஆரம்ப கட்டமாக பேருவளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகளோடு விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. குழுமத் தலைவர் ராமிஸ் நாஸிம் மற்றும் உறுப்பினர்களான பேருவளை நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் அஸாம் பளீல், ஷாமில் புகாரி, ருஷான் பாயிஸ், மற்றும் முஹம்மத் ஆதில் ஆகியோரும் இதன்போது சமுகமளித்திருந்தனர்.
(பேருவளை பீ.எம். முக்தார்)
