சவளக்கடை விக்னேஸ்வரா மற்றும் வாணி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
சவளக்கடை விக்னேஸ்வரா மற்றும் வாணி பாலர் பாடசாலைகளின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் அவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று (25) சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும், நளீர் பவுண்டேசன் நிறுவனத்தின் ஸ்தாபத் பணிப்பாளரும். ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித்தலைவருமான எம்.ஏ.நளீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
புதிய மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் அவர்களுக்கு தேவையான பாடசாலை புத்தகப் பைகள், அப்பியாச கொப்பிகள் போன்ற கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் முன்னணியின் செயலாளர் யோகநாதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜஹான், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



(ஏ.எச்.எம்.ஹாரீஸ் – மத்திய முகாம் செய்தியாளர்)
