நதீரா வசூக் எழுதிய இரட்டை நூல் வெளியீட்டு விழா

நதீரா வசூக் எழுதிய விடியலைத் தேடும் விழிகள் – (கவிதை நூல்), விழித்தெழு பாப்பா – (சிறுவர் பாடல் தொகுப்பு நூல்) ஆகிய இரட்டை நூல் வெளியீட்டு விழா கே/ மாவ/ தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்யாலய கேட்போர் கூடத்தில் நாளை (25) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கே/ மாவ/ தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்யாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எம். ரம்ஸான் (நளீமி) தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் ஹாசிம் ஒமர் பவுண்டேஷனின் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் ஒமர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைஸல் நிகழ்வில் சிறப்பு அதிதியாகவும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரும் உதயம் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் மற்றும் எஸ்.எல்.நௌபர் கபூரி றியாதி ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர்.
மாவனல்லை சப்புமல் நிறுவனப் பணிப்பாளர் அக்ரம் கமாலுதீன், கல்ப் டிரவல்ஸ் பணிப்பாளர் ஐ.எல்.எம். தாஹிர், அரோமா நெச்சுரல் ரப்பர் நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.எம். நஜீப், ஓய்வுபெற்ற பொறியியலாளர் யூசுப் ஸைனுடீன், மாவனல்லை எச்.எஸ்.கலெக்ஸனின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஹாசிர், மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். முஹம்மத் நௌஸாத், அரநாயக பிரதேச சபை உறுப்பினர் எம்.எப்.எம். அமீன், தல்கஸ்பிட்டிய குட்நைட் நிறுவன உரிமையாளர் எம்.எஸ்.எம். ரிஸான் ஆகியோர் நிகழ்வில் முதல் பிரதிகளைப் பெறுகின்றனர்.
மாவனல்லை வலய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் நிகழ்வில் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சக்தி எப்.எம், சக்தி டிவியின் சந்தைப்படுத்தல் நிர்வாகியும் அறிவிப்பாளருமான எம்.எச்.எம். சௌகி நிகழ்ச்சி தொகுப்பை மேற்கொள்கிறார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
