கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிறை மாநாடு-2026
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2026 ஜனவரி 25ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிறை மாநாடு 2026 நடைபெற்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரசன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழு தலைவர் ஹிஷாம் பத்தாஹி நிகழ்வுக்கு
முன்னிலை வகித்தார்.
நிகழ்வு அல் ஹாபிழ் எம்.ஜே.எம் சப்ரி அவர்களினால் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு செயலாளரும் அல்ஹசனிய்யா அரபிக் கல்லூரி உதவி அதிபருமான மௌலவி அல் ஆலிம் ஏ.எல்.எம் மஸீன் அல் மக்தூமி அல் ஹஸ்னி அவர்கள்
வரவேற்புரையாற்றினார்.
முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஏ அப்ரோஸ் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் விஷேட உரை நிகழ்த்தினார்.
”பிறை பார்ப்பதில் வளிமண்டலத்தின் வகிபாகம்” எனும் தலைப்பில் வளிமண்டலவியல் திணைக்கள உத்தியோகத்தர் Dr.ஏ.எம்.எம் சாலிஹின் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து ஷரீஆ கண்ணோட்டத்தில் சர்வதேசப் பிறை எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவரும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுவின் பிரதித் தலைவருமான அல்-ஆலிம் றிழா அல்மக்தூமி அவர்கள் உரையாற்றினார்.
“பிற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பிறை தொடர்பான நெறிமுறைகளினால் நம் நாட்டில் ஏற்படும் தாக்கம்” எனும் தலைப்பில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு செயலாளர் மௌலவி எம் ஆர் அப்துர் ரஹ்மான் அல் ஹிலாலி அவர்கள் உரையாற்றினார்கள்.
அதனை தொடர்ந்து தலைப்பிறை தீர்மானிப்பதில் சாட்சியத்தின் வகிபாகம்” எனும் தலைப்பில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழுவின் உறுப்பினரும், அல் மஹ்மூதிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் ஆலிம் சி.ஐ.எம். அஸ்மிர் ஹசனி உரையாற்றினார்.
“தொடர்ந்தும் பிறை தீர்மானங்களை தெளிவுபடுத்தல்” எனும் தலைப்பில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழு தலைவரும் மதீனதுல் இல்ம் அரபிக் கல்லூரி சிரேஷ்ட
விரிவுரையாளருமான கலீபதுஷ் ஷாதுலி அல் உஸ்தாத் ஆலிம் எம்.பி.எம் ஹிஷாம் ஃபத்தாஹி உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் செயலாளர் அல்ஹாஜ் பாரீஸ் பஹ்மி அவர்கள் நன்றியுரை தொரிவித்தார்.
இந் நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியளாலர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்த இந் நிகழ்வில் திஹாரி அல் ஹஸனிய்யா அரபிக் கல்லூரி மலேசிய, கம்போடிய மடகஸ்கர் மாணவர்க ளினால் கஸீதா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஊடகப் பிரிவு)









