அம்பாரை மாவட்டத்தில் உலக வங்கியின் சமுக வலுவூட்டத்தில் தி்ட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான மீளாய்வுக் கூட்டம்

உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி பெறும் பயனாளர்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் 2026.01.21,22,23, ம் திகதிகளில் மதிப்பாய்வு நடைபெற்றது.
இதன் பின்னர் மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான உலக வங்கியின் சமூக வலுவூட்டல் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் அம்பாரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளரும் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருமான எஸ்.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது.இதில்
சமுர்த்தி திணைக்கள அதிகாரிகளும்,உலக வங்கியின் பிரதி நிதிகள் மற்றும் மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
உலக வங்கியின் சமூக வலுவூட்டல் திட்டத்தினூடாக அம்பாரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களின் தற்போதைய நிலைமை மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள் நடைமுறையில் அமல்படுத்தப்படும் விதம் , கள ஆய்வின் அவதானிப்புக்கள் இத்திட்டங்களை பயனாளர்களுக்கு அதிகளவில் பயனுள்ளதாகவும், செயல்திறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்குதேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.


இஸட் ஏ.ஏ.றஹ்மான்
(ஒலுவில் விசேட செய்தியாளர் )
