அதிபர் ஜே.வஹாப்தீனுக்கு இரண்டு தேசிய விருதுகள்.

புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2024 ம் ஆண்டுக்கான தேசிய இலக்கிய விருது வழங்கல் நிகழ்வு 2026 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு பத்தரமுல்லையிலுள்ள சுஹுருபாய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் இலங்கையின் இலக்கியத்துறைக்கு கால்பதிக்கும் படைப்பாளிகளில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இவ்விழாவில் அதிபர் ஜே.வஹாப்தீன் இரண்டு பதக்கங்களையும் பணப்பரிசிலையும் பெற்றுக் கொண்டார்.

(இஸட்.ஏ.றஹ்மான்)
