பெற்றோர் ஒன்று கூடலும், பரிசளிப்பு விழாவும்
பேருவளை, சீனங் கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் 2026ம் ஆண்டுக்கான பெற்றோர் ஒன்று கூடலும், ஆண்டிறுதிப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் அண்மையில் கலாபீட பாஸிய்யா மண்டபத்தில் நடைபெற்றது. கலாபீட அதிபர் அல் உஸ்தாத் அஸ்மிகான் (முஅய்யிதி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உஸ்தாத்மார்கள், மாணவர்களது பெற்றோர்கள், நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.
கலாபீடத்தின் உத்தேச திட்டங்கள், மாணவர்களது முன்னேற்றங்கள் பற்றி பெற்றோர்களுக்கு அதிபர் தெளிவுபடுத்தியதோடு பொற்றோர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்தும் விளக்கினார்.


(பேருவளை பீ எம் முக்தார்)
