உள்நாடு

“தேசத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு” குறித்த சிங்கள மொழியிலானஆய்வு நூல் வெளியீட்டு விழா

பல நூற்றாண்டுகளாக இலங்கை மண்ணில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இந்நாட்டின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், பண்பாடு போன்ற தலங்களில் செய்த பங்களிப்புக்களை வெளிப்படுத்தி அதன்மூலம் அவர்களின் தேசப்பற்றையும், பங்களிப்பையும் பறைசாற்றும் வகையிலான வரலாற்று ஆவணமான கலாநிதி ரவூப் ஸெய்ன் தமிழில் தயாரித்து வழங்கிய “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” என்ற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு
“අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ” என்ற பெயரில் கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களால் மேற்கொள்ளப்பட்டு அதன் வெளியீட்டு விழா இம்மாதம் 28ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சிறப்புவாய்ந்த இவ்விழாவின் பிரதம அதிதியாக புத்தசாசன மற்றும் மத விவகார கலாசார அமைச்சர் கலாநிதி சுனில் செனவி கலந்துகொள்வதோடு பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கலாநிதி ரோஹித திசாநாயக விடே உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் பணிப்பாளர் திரு மஞ்சுல கஜநாயக விழாவை ஏற்பாடு செய்யும் பஹன மீடியாவின் 7 ஆண்டு நிறைவு குறித்த உரையை நிகழ்த்தவுள்ளார்.

பிரதி அமைச்சர்கள், சர்வமதத்தலைவர்கள், நிறுவனத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் பலரும் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *