உக்ரைன் – ரஷ்ய போர்; நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இன்று (23) மற்றும் நாளை (24) அபுதாபியில் முதல் முத்தரப்பு சந்திப்பில் சந்திப்பார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
