மாத்தளை கோட்டகொட தர்கா கந்தூரி எதிர்வரும் 25ஆம் திகதி..!
சரித்திர பிரசித்தி பெற்ற மாத்தளை மாவட்டத்தில் உள்ள கோட்டகொட ஜும்ஆ பள்ளிவாயல் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம் பெற்று வரும் 108வது வருட கோட்டகொட தர்கா கந்தூரி எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மேற்படி பள்ளிவாயலில் இடம்பெற உள்ளது.
இப்பள்ளிவாயலில் அடங்கப்பட்டிருக்கும் அஷ்ஷேக் அப்துல் முத்தலிப் வலியுள்ளா நினைவாக இக்கந்தூரி இடம்பெற்று வருகின்றது 24 ஆம் திகதி சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து சுபஹான மௌலூத் மஜ்லிஸ் மற்றும் ராதிப் மஜ்லிஸும் இடம் பெற்று மறுநாள் இங்கு மதிய போசனம் இங்கு வரும் மக்களுக்கு வழங்கப்படும் இதற்கான ஏற்பாடுகளை மேற்படி பள்ளிவாயல் நிர்வாக சபை மற்றும் கந்தூரி ஏற்பாட்டு குழு மேமன் கமிட்டி மேற்கொண்டு வருகின்றது
(மாத்தளை எம்.சதூர்தீன்)
