இந்தோனேசிய கடற்படை கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ இலங்கையை வந்தடைந்தது..!
இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற போர்க்கப்பல் வியாழக்கிழமை (22) விநியோக மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Sigma Corvette FS என்ற ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ போர்க்கப்பல் 90.71 மீட்டர் நீளத்த்த கொண்டதும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Annugerah Anurullah கடமையாற்றினார்.
போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, கப்பல் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விஜயம் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே தொழில்முறை அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும், இடைச்செயல்பாடு மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும்.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)



