அவுஸ்திரேலிய துப்பாக்கி சூட்டில் மூவர் பலி..!
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
வெளியாட்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்றும், உள்ளூர்வாசிகள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலியா சிட்னி – போண்டி கடற்கரையில் டிசம்பரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
