விளையாட்டு

இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகிறது. இந்தத் தொடர் கொழும்பு ஆர் பிரேமதாச மைதனத்தில் இடம்பெறவுள்ளது டன் அனைத்துப் போட்டிகளும் பகலிரவு போட்டிகளாக இடம்பெறவுள்ளது.

அதற்கமைய முதல் போட்டி நாளை 22ஆம் திதியும், இரண்டாவது போட்டி 24ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 27ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

மேலும் இத் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணி இன்று இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விபரம்

சரித் அசலங்க (தலைவர்)
பெதும் நிசங்க
கமில் மிஷாரா
குசால் மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம
பவன் ரத்நாயக்க
தனஞ்சய டி சில்வா
ஜனித் லியனகே
கமிந்து மெண்டிஸ்
துனித் வெல்லாலகே
வனிந்து ஹசரங்கா
ஜெஃப்ரி வாண்டேஸ்
மகேஷ் தீக்சன
மிலன் ரத்நாயக்க
அசிதா பெர்னாண்டோ
பிரமோத் மதுஷன்
ஈஷான் மலிங்கா

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *