Uncategorizedஉள்நாடு

நேபாள பாதுகாப்பு சேவைகள் பணிப்பாளர் குழுவினர் இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு கல்வி சுற்றுப் பயணம்

இலங்கையில் படிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் பணியாளர் பாடநெறியில் பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்கள் அடங்கிய பிரிகேடியர் ஜெனரல் பூர்ம பகதூர் கட்ரி (Purna Bahadur Khatri) தலைமையிலான அதிகாரிகள் குழு திங்கட்கிழமை (19) தலைமையகத்திற்கு வருகை தந்தது.

இந்த விஜயத்தின் போது, பிரிகேடியர் ஜெனரல் பூர்ம பகதூர் கட்ரி (Purna Bahadur Khatri) மற்றும் கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இடையே உத்தியோகப்பூர்வ சந்திப்பு நடைபெற்றதுடன், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்த சுமுகமான கலந்துரையாடலுக்குப் பிறகு, குறித்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், கடற்படைத் தலைமையக கேட்போர் கூடத்தில், நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையின் பங்கு குறித்து கடற்படையின் தலைமை அதிகாரி விளக்கினார்.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *